Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

உரி தாக்குதல் கஷ்மீர் பிரச்சனையின் எதிர்வினையாக இருக்கலாம்!


உரியில் இராணுவ உயர் பாதுகாப்பு முகாமில் நடந்த தாக்குதல், க‌ஷ்மீரில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் அட்டூழியங்களுக்கான எதிர்வினையாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மேலும், உரி தாக்குதலில் ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது பழி சொல்வதை விடுத்துவிட்டு க‌ஷ்மீரில் கடந்த இரு மாதங்களாக நிகழ்ந்த உயிர் பலி தொடர்பாக இந்தியா விசாரணை மேற்கொள்ளட்டும் என ஷெரீப் கூறியுள்ளார்.

லன்டணில் செய்தியாளர்களை சந்தித்த ஷெரீப், "க‌ஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கள் உறவினர்களை இழந்தவர்களும், தங்களது பார்வையையும், தங்கள் உறவுகளின் பார்வையையும் இழந்தவர்களும் கொந்தளித்துப் போய் இருக்கிறார்கள். உரி தாக்குதல் க‌ஷ்மீரில் நடைபெறும் அட்டூழியங்களுக்கான எதிர்வினையாக கூட இருக்கலாம்.

ஆனால், இந்தியா அவசர அவசரமாக பழியை பாகிஸ்தான் மீது சுமத்துகிறது. சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் இந்தியா பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டுகிறது.

க‌ஷ்மீரில் இந்தியா கட்டவிழ்த்துவிட்டுள்ள அட்டூழியம் உலகறிந்தது. க‌ஷ்மீரில் இதுவரை 108 பேர் பலியாகியிருக்கின்றனர். 150-க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்துள்ளனர். க‌ஷ்மீரில் தனது பங்கு என்ன என்பதை இந்தியா சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

உரி தாக்குதலில் ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது பழி சொல்வதை விடுத்துவிட்டு க‌ஷ்மீரில் கடந்த இரு மாதங்களாக நிகழ்ந்த உயிர் பலி தொடர்பாக இந்தியா விசாரணை மேற்கொள்ளட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic