இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 262 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து அணி.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 318 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 152 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.
ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று சுழற்பந்து வீச்சாளார்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துகளை நியூசி.. வீரர்கள் எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெளியேறி 262 ரன்களில் சுருண்டது.
நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக வில்லியம்சன் 75 ரன்களும், லதாம் 58 ரன்களும் எடுத்திருந்தனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

No comments:
Write comments