Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

தினமும் 10 கிலோ நூடுல்ஸ் சாப்பிடும் நபர்...!

daily taking 10 kg of noodles

மலேசியாவின் சிபு பகுதியைச் சேர்ந்த சியா ஜி ஹெர்ங்கினின் உடல் பருமனை கண்டு பலரும் திகைத்து போயுள்ளனர்.

இவர் கடந்த 10 ஆண்டு காலமாக ஒவ்வொரு நாளும் 10.5 கிலோ நூடுல்ஸை சாப்பிட்ட பிறகு 12 க்கும் மேற்பட்ட ஜூஸ் வகைகள் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தொடர்பினை மேற்கொண்டு உள்ளார். அப்போது  அங்கு வந்த மீட்பு குழுவினர் 250kg உடல் பருமன் கொண்ட இவரினை கண்டு திகைத்து போய் உள்ளனர்.

இது தொடர்பாக மீட்பு மற்றும் தீயணைப்புத்துறைகள் உதவிப்பணியாளர் கூறும்போது, எங்களுக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பு வந்து ஒரு மணி நேரத்தில் ஹெர்ங் வசிக்கும் இடத்திற்கு சென்றோம். மேலும், நாங்கள், 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் அவரை அந்த அறையிலிருந்து வெளியில் கொண்டு வந்தோம்.

எனினும் அவருடைய‌ நிலையில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றமுடியவில்லை, இதற்காக பாரம் தூக்கும் டிரக் ஒன்றை பயன்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். மருத்துவனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

இது தொடர்பாக சியாவின் தாய் கூறுகையில், அதிகமாக சாப்பிடுவதால் இது போன்ற பிரச்சினை வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு முன்பாக கைத்தடி உதவியுடன் மெல்ல மெல்ல நடந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், சியா ஜி ஹெர்ங்கின் உடல் நிலை கடந்த மூன்று நான்கு வருடங்களாக மோசமடைந்து வந்துள்ளதால் அதிக‌ நேரம் படுக்கையில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.




No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic