Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

கஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது!

curfew lifted in all districts of kashmir

கஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல இடங்களில் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது, கஷ்மீரில் நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் கஷ்மீரில் எந்த பகுதியிலும் எந்தவித அசம்பாவதி சம்பவங்களும் நிகழவில்லை என்பது ஆறுதலை தருகிறது. இருந்த போதிலும் பிரிவினைவாதிகள் முழு கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்திருப்பதால கடைகள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் மூடியே இருந்தது. எனினும் பிற்பகல் 2 மணி அளவில் சந்தைகள் திறக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி கொல்லப்பட்டதை அடுத்து அங்கு மிகப்பெரும் வன்முறை வெடித்தது. கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களாக நடைபெற்று வந்த இவ்வன்முறையால் 80ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic