டெல்லியில் காதல் கடிதம் முதல் அனைத்துவகை கடிதங்களும் கைப்பட எழுதி உரியவர்களுக்கு அனுப்பும் வகையில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
பரபரப்பான வாழ்க்கை சூழலில் எவருக்கும் தனது கைப்பட ஒரு கடிதம் எழுதி தமது நெருங்கிய உறவுகளான மனைவி அல்லது காதலி என எவரையும் மகிழ்விக்கும் நேரம் கிடைப்பதில்லை.
கடிதங்கள் கைப்பட எழுதும் காலம் இந்த கணணி யுகத்தில் மலையேறிவிட்டது என்பதே உண்மை. ஆனாலும் தொலை தூரத்தில் இருக்கும் சில காதலர்கள் தற்போதும் தங்கள் கைப்பட கடிதங்கள் எழுதி காதலிகளுக்கு அனுப்பி வரத்தான் செய்கின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் அனுபவ் மற்றும் சில நண்பர்கள் இணைந்து முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் சிந்தித்து ஒரு நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.
ஆம், கடிதங்களை கைப்பட எழுதி உரியவர்களுக்கு அனுப்பி வைப்பதே இந்த நிறுவனத்தின் பிராதான நோக்கம். காதல் கடிதங்கள், பிறந்த நாள் வாழ்த்துகள், திருமண நாள் வாழ்த்துகள் என அனைத்துவகையான கடிதங்களும் இந்த நிறுவனத்தினரால் எழுதி அனுப்பப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்கள் தேவையை இவர்களுக்கு மின் அஞ்சல் மூலமாகவோ தொலைப்பேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டும், இவர்கள் உரிய நாளில் குறிப்பிட்ட நபருக்கு சென்று சேரும் வகையில் கடிதங்களை கைப்பட எழுதி தபாலில் அனுப்பி வைக்கின்றனர்.

இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில், இவர்கள் இதுவரை
2,500 கடிதங்கள் எழுதி வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி
வைத்துள்ளனர்.
ஆங்கிலம், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய
மொழிகளில் கடிதங்கள் தற்போது எழுதப்பட்டு வருவதாகவும், ஒரு கடிதத்திற்கு
ரூ.99 கட்டணமாக வசூலிக்கின்றனர்.
சிலர் கடிதத்தினூடே பூங்கொத்து
மற்றும் இனிப்பு வகைகளை அனுப்ப முடியுமா என கேட்டு வருவதாக குறிப்பிட்ட
அனுபவ், எதிர்காலத்தில் அதுபோன்ற ஒரு சூழலை உருவாக்கவும் தங்களது நிறுவனம்
திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments