Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

பலஸ்தீன அரசை நிருவ ஒபாமா வலியுறுத்தமாட்டார் என நம்புகிறேன்!

hope obama will not support palestine state

பெத்லகம்: ஐ நா சபையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பலஸ்தீன அரசை நிறுவ வேண்டுமென கோரிக்கை வைக்கமாட்டார் என தாம் நம்புவதாக இஸ்ரேலிய பிரதம்ர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நேற்றைய தினம் அளித்த பேட்டியில் நிருபர் இஸ்ரேலிய பிரதமரான உங்களின் ஆதரவு இல்லாமல் பலஸ்தீன அரசை நிறுவுவதற்கு வலியுறுத்தமாட்டேன் என்ற உத்திரவாதத்தை ஒபாமா தங்களுக்கு கொடுத்திருக்கிறாரா? என கேட்டதற்கு பதில் அளிக்கையில் பதில் கூறிய இஸ்ரேல் பிரதமர் கூறும்போது "ஒபாமா என்னிடம் உத்திரவாதம் அளித்தாரா என நீங்கள் கேட்டால், நான் இல்லை என்று தான் சொல்வேன். அதே சமயம் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக பலஸ்தீன அரசை நிறுவவேண்டுமென அவர் வலியுறுத்த மாட்டார் என்றே நான் நம்புகிறேன்" என தெரிவித்தார்.

71வது ஐ. நா சபை பொதுக்குழு கூட்டத்தில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகும், பலஸ்தீன அதிபர் மக்மூது அப்பாஸ் ஆகிய இருவரும் உரை நிகழ்த்திய பிற்கு இஸ்ரேலிய பிரதமர் இந்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு எதிராக இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பிரான்சு அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் பிரான்சின் இந்த நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் ஒத்துவரவில்லை. மேலும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு கூறும்போது இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு எதிரான மோதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமெனில் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். அது எப்படிப்பட்ட பேச்சுவார்த்தை என்றால் அந்த பேச்சுவார்த்தைக்கு எவ்வித முன் நிபந்தனைகளையும் பலஸ்தீன் முன்வைக்கக்கூடாது" என தெரிவித்தார்.

ரஷியாவும் இஸ்ரேல்-பலஸ்தீன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடந்த 2002 ஆம் ஆண்டு அரபு சமாதான முயற்சியில் எகிப்துடனான அமைதி பங்கீட்டிற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்தது. இருந்த போதும் இரு நாடுகளுக்கிடையேயான சமாதான பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கு சாத்தியக்கூறுகளே இல்லாமல் இருக்கிறது.

இரு நாட்டுத்தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டே இருக்கின்றனர். இவ்விரு நாடுகளுக்கிடையேயான சமாதான உடன்படிக்கைக்கு பல நாடுகள் முயற்சித்தும் அவை அனைத்தும் தோல்விலேயே முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic