Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 26, 2016

தலித்களின் சமூக நீதிக்காக நடவடிக்கை எடுக்கப்படும்! - பா.ஜ.க செயற்குழுவில் தீர்மானம்

bjp plans to attract more daliths

தலித் மக்களுக்கு சமூக நீதி கிடைக்கும் வகையில், சமூக நல்லிணக்கம் கடைபிடிக்கப்படும் என, பாஜக தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த, பாஜக‌ தேசிய செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் கூறியுள்ளதாவது,தலித் மக்கள் மிகவும் பின்தங்கியவர்களாக இருப்பதற்கு, காங்கிரஸ் ஆட்சியின் போது, அவர்களை ஒடுக்கும் வகையில் செயல்படுத்திய திட்டங்களே காரணம்.

ஜன சங்கத் தலைவரான தீனதயாள் உபாத்யாயாவின் நுாற்றாண்டை கொண்டாடும் நிலையில், தலித் மக்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும் வகையில், இந்த ஆண்டு, சமூக நல்லிணக்க ஆண்டாக கொண்டாடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபகாலமாக தலித் சமூகத்தினர் மீது பல மாநிலங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது பா.ஜ.க அரசிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. தலித் சமூகத்தினரை கவர்வதற்கான பல்வேறு முயற்சிகளை தற்போது பா.ஜ.க எடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic