Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 26, 2016

ஹிலாரி, டிரம்ப் இடையே நேரடி விவாதம்!

direct debate with hillary and trum will be tonight

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் - ஹிலாரி கிளிண்டன் இடையேயான நேரடி விவாதம் இன்று (26-09-16) இரவு நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் அடுத்த மாதத்தோடு முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, நவம்பர் 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம் காண குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் இரு கட்சிகளின் வேட்பாளர்களிடையே நேரடி விவாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விவாதம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும்.


நியூயார்க்கில் உள்ள ஹாப்ஸ்ட்ரா பல்கலையில், இவர்களிடையேயான முதல் விவாத நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் நடைபெறும் இந்த விவாதம், இந்திய நேரப்படி நாளை(செவ்வாய்கிழமை) காலை 6.30 மணிக்கு துவங்கும். 2வது விவாதம் அக்.,9ம் தேதியும், இறுதி விவாத நிகழ்ச்சி அக்.,19ம் தேதி நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic