Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்!


local body election will be on october


தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய‌ தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இத்தகவலை சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் அறிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடித் தேர்தல்கள் அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 91,098 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுக்கள் நாளை (26.09.2016) முதல் பெறப்படும். நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.

வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் அக்டோபர் 4-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 6-ம் தேதியே கடைசி.

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உள்ளாட்சித் தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேரடி தேர்தல் அனைத்தையும் அக்டோபர் 26-ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5.8 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தல் பணிகளை பார்வையிட 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நேரடித் தேர்தலுக்குப் பின்னர் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் என 13,362 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 2-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic