Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 26, 2016

பி.எஸ் .எல்.வி. சி–35 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ISRO lauches PSLV 35 Successfully

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறியவும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள், சுற்றுச்சூழலை அறிவது, காற்றின் திசையை அறிந்து கொள்ளவும் 377 கிலோ எடை கொண்ட ‘ஸ்கேட்சாட்–1’ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோளை 26–ந்தேதி காலை 9.12 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது 37–வது ராக்கெட் ஆகும். ஸ்கேட்சாட்–1 செயற்கைகோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் தூரத்தில் விண்வெளி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இதனுடைய ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இதனுடன் பி1–சாட், பிரதாம், பாத்பைண்டர்–1, அல்சாட்–1பி, அல்சாட்–2பி, அல்சாட்–1என், கேன்எக்ஸ்–7 ஆகிய செயற்கைகோள்களும் செலுத்தப்படுகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அகடமிக் நிறுவனங்களை சேர்ந்த 2 செயற்கைகோள்களும், அல்ஜீரியா, கனடா, அமெரிக்க நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களும் இவற்றில் அடங்கும்.

பிரதானமான செயற்கைகோளை (ஸ்கேட்சாட்–1) திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்திய உடன், ராக்கெட்டின் என்ஜின் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கி மற்றொரு சுற்றுப்பாதையில் செயற்கைகோளை நிலைநிறுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டுக்கான 48 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முன் தினம் துவங்கியது. இந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று காலை 9.12 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic