Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 12, 2016

கேரளாவில் பா.ஜ.க பிரமுகர் வெட்டி கொலை..!

bjp activist killed in kannur

கேரளாவில் பா.ஜ.க பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து அக்கட்சியின் ஊடக தொடர்பாளர் எம்.எஸ் குமார் அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயனை கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தைப்போலவே கேரளாவிலும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் நடைபெற்ற பெரும்பாலான கொலைகள் அனைத்தும் சொந்த தகராறு காரணமாக நடந்தது என்றாலும் அவை அனைத்தும் அரசியலாக்கப்பட்டு வன்முறைகள் நடைபெற்றது. ஆனால் கேரளாவில் நடந்த கொலைகள் அனைத்தும் அரசியல் கொலைகளாகவே இருக்கின்றது.

கேரள மாநிலம் கன்னூரில் ஆளும் சி.பி.எம் கட்சிக்கும் பா.ஜ.கவினருக்குமிடையே கடுமையான மோதல் போக்குகள் இருந்து வருகிறது. மாதத்திற்கு ஒரு முறை என்கிற ரீதியில் இவ்விரு கட்சி உறுப்பினர்களுக்கிடையே நடைபெறும் மோததில் அவ்வப்போது படுகொலைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கன்னூரில் பா.ஜ.க பிரமுகர் ராமித் ஒருவரை இன்று காலை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இவரது தந்தை உத்தமான் என்பவர் கடந்த 2002ஆம் ஆண்டு சிபிஎம் கட்சியினரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கேரள பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளர் எம்.எஸ் குமார் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது "கண்ணூரில் பா.ஜ.க உறுப்பினரை சி.பி.எம் பயங்கரவாதிகள் வெட்டி கொலை செய்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. இந்த வருடத்தில் மட்டும் இதுவர 7 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளது. இங்கு முதலமைச்சராக இருக்கு பிணராயி விஜயன் குண்டர்களுக்கும், கூலிப்படையினருக்கும் தலைவர் போன்று செயல்பட்டு வருகிறார்" என தெரிவித்தார்.

பா.ஜ.க சார்பில் நாளை கண்ணூர் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பதட்டம் அதிகம் காணப்படுவதால் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic