தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலக்குறைவால் அதிமுகவினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
முதல்வர் பெயரில் அர்ச்சனை, வழிபாடு என அதிமுகவின் தீவிர வேண்டுதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் தலைமை கழக பேச்சாளரும், நட்சத்திர பேச்சாளருமான நடிகை விந்தியாவும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற கோயில் கோயிலாக பிராத்தனை செய்து வருகிறார்.
நடிகை விந்தியா அதிமுகவில் முக்கியமான பேச்சாளர். எதிர் கட்சிகளை கிழி கிழி என கிழித்து தனக்கே உரிய பாணியில் நக்கலும், நையாண்டியுமாக பேசுவார் விந்தியா. இவரின் பேச்சை ரசிக்க ஒரு கூட்டமே உண்டு அதிமுகவில். இவரது பேச்சை ரசித்து கேட்கும் ஜெயலலிதா பலமுறை விந்தியாவை பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் விந்தியா துடித்து போய்விட்டார். அன்று முழுவதும் உணவு உண்ணாமல் அழுதபடியே இருந்துள்ளார் விந்தியா.
இப்போதெல்லாம் விந்தியா வீட்டுக்கே செல்வதில்லையாம். கோயில் கோயிலாக முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிராத்தனை செய்து வருகிறார். ஒரு கோயிலில் வேண்டுதல் முடிந்ததும், அடுத்த கோயில் என தனது பிராத்தனையை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் ஜெயலலிதா மீது அளவு கடந்த அன்பு கொண்ட விந்தியா.

No comments:
Write comments