Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 18, 2016

அமெரிக்க முஸ்லிம்கள் ஹிலாரிக்கே ஆதரவு..!

american muslims support hillary for presidentஅமெரிக்க அதிபர் தேர்தலில் 72 சதவீத இஸ்லாமியர்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை ஆதரிப்பதாகக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வேட்பாளர்களுக்கு அமெரிக்க இஸ்லாமியர்களிடையே உள்ள ஆதரவு குறித்து அமெரிக்க இஸ்லாமியர் நல்லுறவுக் குழு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

800 முஸ்லிம்களிடம் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 72 சதவீத முஸ்லிம்கள் ஹிலாரிக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்தனர். குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் புக்கு 4 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் அகதிகள் அமெரிக்காவில் குடியேறுவதைக் கட்டுப்படுத்துவேன் என்று டிரம்ப் தனது பிரசாரக் கூட் டங்களில் தெரிவித்து வருகிறார். பயங்கரவாதச் செயல்களுக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பது உள்ளிட்ட பல கடுமையான கருத்துகளை டிரம்ப் வெளியிட்டு வருவதால், அந்தப் பிரிவினரிடையே அவருக்கு ஆதரவு குறைவாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.

கருத்துக் கணிப்பில் உரிமைகள், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், மாணவர் பாதுகாப்பு, பயங்கரவாதம், தேசப்பாதுகாப்பு ஆகிய அம்சங்களைக் குறித்து முஸ்லிம்கள் கண்ணோட்டத் தில் கேள்விகள் கேட்கப்பட்டன. அமெரிக்காவில் சுமார் 33 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 1 சதவீதத்தினர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic