உலகளவில் இஸ்ரேல் இராணுவத் தாக்குதலுக்கு தனிச் சிறப்பான இடம் இருக்கிறது. எதிரிகளை குறிவைத்து தாக்கி அழிப்பது, பயங்கரவாத முகாம்களை அளிப்பது ஆகியவற்றை செயல்படுத்த இஸ்ரேல் இராணுவத்தில் 'எக்ஸ்ப்ளாய்ட்ஸ்' (exploits) என்ற முறை பயன்படுத்தப்படுகிறது.
உலகப் புகழ் பெற்ற இஸ்ரேலின் எக்ஸ்ப்ளாய்ட்ஸ் முறை வியூகத் தாக்குதலுக்கு நிகரானது அண்மையில் எல்லையில் இந்திய இராணுவம் நடத்திய துல்லிய திடீர் தாக்குதல் எனக் கூறியிருக்கிறார் பிரதமர் மோடி.
இமாச்சலப் பிரதேசத்தில் மூன்று நீர்மின் திட்டங்களை அர்ப்பணித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "எல்லையில் இந்திய இராணுவம் நடத்திய துல்லிய திடீர் தாக்குதலை இஸ்ரேலின் எக்ஸ்ப்ளாய்ட்ஸ் முறை வியூகத் தாக்குதலுக்கு நிகரானது. எல்லையில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் குறித்து தற்போது உலகளவில் பேசப்படுகிறது. நமது இராணுவத்தின் திறன் மற்றவர்களைவிட எந்த வகையிலும் சளைத்தது இல்லை என்பது உலக அரங்கில் நிரூபணமாகியுள்ளது" என்றார்.
கடந்த செப்டமர் 29ஆம் தேதி எல்லையில் இந்திய இராணுவம் நடத்திய துல்லிய திடீர் தாக்குதல் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பலவிதமான கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில் இந்த கருத்தை பிரதமர் முன்வைத்துள்ளார்.
No comments:
Write comments