Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 12, 2016

அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட வேண்டும் - ஜவாகிருல்லா

arjun sampath should be arrestedதமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பயங்கர ஆயுதங்களை வைத்து வழிபாடு நடத்தி அதனை பேஸ்புக்கில் வெளியிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை கைது செய்ய வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் " ஆயுத பூஜை தினத்தன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தனது வீட்டில் பல பயங்கர ஆயுதங்களை வைத்து வழிபடும் படத்தை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் துப்பாக்கிகள், கத்திகள், அரிவாள் உள்ளிட்ட அனைத்தும் பயங்கர ஆயுதங்களாக உள்ளன.

தமிழகத்தில் தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கவே இதுபோன்ற ஆயுதங்களின் படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அவரது இந்த நடவடிக்கை தமிழகத்தில் ஆயுதக் கலாசாரத்தைப் பரப்புவதற்கும் தமிழகத்தில் நிலவும் சமூக அமைதியை சீர்குலைக்கவும் தூண்டுகோலாக அமைந்துள்ளது. ராணுவத்துக்குப் பயன்படும் இதுபோன்ற பயங்கர ஆயுதங்கள் அர்ஜுன் சம்பத்துக்கு எங்கிருந்து கிடைத்தது என காவல்துறை விசாரிக்க வேண்டும்.

பயங்கர ஆயுதங்களை வைத்து வழிபட்டு தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க அதனை முகநூலில் வெளியிட்ட அர்ஜுன் சம்பத்தைக் கைதுசெய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதுதொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் அவர்களுக்கும், தமிழகக் காவல்துறை இயக்குநர் (டி.ஜி.பி.) அவர்களுக்கும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic