Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 12, 2016

ஆயுத பூஜை செய்வது எனது உரிமை..! - அர்ஜுன் சம்பத்

celebrating ayudha pooja is my right

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தான் ஏன் ஆயுத பூஜை அன்று துப்பாக்கிகளை வைத்து பூஜை செய்தேன் என்பதை விளக்கியுள்ளார்.

கோவையைச்சேர்ந்த அர்ஜுன் சம்பத் சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது வீட்டில் ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் துப்பாக்கி, அறிவாள் மற்றும் கூர்மையான கத்திகளை வைத்துக்கொண்டு பூஜை செய்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரச்சனை விஸ்வரூபமாகப்போக உடனே அதனை தனது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.

ஏன் இவ்வாறு செய்தேன் என்பதற்கு அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறும், "எனது மகன் துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளியில் பயின்று வருகிறான். அந்த பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளை வைத்து தான் பூஜை நடத்தினே. ஆயுத பூஜை நடத்துவது என்பது எனது தனிபட்ட உரிமை. அதில் யாருக்கும் தலையிட அனுமதியில்லை. வேண்டுமென்றே என் மீதும் என்னைப்போன்ற இந்து இயக்க தலைவர்கள் மீது அவதூறு பரப்ப முயற்சிகள் நடக்கிறது. தேவைப்பட்டால் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எனினும் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கோவை மாநகர காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic