அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தொழில் அதிபரும், பெரும் கோடீஸ்வரருமான டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரசாரத்தின்போது ஹிலாரி கிளிண்டனும், டொனால்டு டிரம்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் பற்றி தற்போது வெளியாகி உள்ள தகவல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு டொனால்டு டிரம்ப் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் இப்போதுதான் அவர்களை முத்தமிட ஆரம்பித்துள்ளேன். நீங்கள் பிரபலமானவராக இருந்தால் அவர்கள் உங்களை அனுமதிப்பார்கள் என்று ஆபாசமாக பேசுவது போல உள்ளது. இந்த ஆடியொ பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆடியோ குறித்து டொனால்டு டிரம்ப் உடனடியாக வருத்தம் தெரிவித்தார். இது ஒரு பூட்டிய அறைக்குள் நடந்த வேடிக்கையான நிகழ்வாகும். இருப்பினும் இது யாரையும் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments