சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ் நடவடிக்கையை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள முறுகல் நிலையை முன்வைத்து விவாதிக்க பாகிஸ்தான், கடந்த புதன்கிழமையன்று பாராளுமன்றத்தைக் கூட்டியது. பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் அதில் ஒரு தீர்மான வரைவைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், ‘காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல’ எனவும், ‘ஐ.நா.வின் செயல்திட்டப்படி கோட்பாடுகளின்படி காஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பகுதி’ என்றும் கூறப்பட்டுள்ளது. ‘காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் அராஜகம் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பாக உலக நாடுகள் சுயேட்சையான விசாரணை நடத்த வேண்டும்’ என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவுடன் காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகள், சர்ச்சைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த சுமூகமாக பேசி தீர்க்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மான அறிக்கை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Write comments