தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இயங்கிவருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்களின் முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்தும்விதமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் எம்.ஜி.வைத்யா பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது விரும்பத்தகாதது. எனவே, இத்தனை காலமாக நடைமுறையில் இருந்த சாதிரீதியிலான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டின்படி எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மட்டுமே இடஒதுக்கீடு பெற தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். அனைத்து சாதி, மதங்களிலும் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் உள்ளன. எனவே, இடஒதுக்கீட்டில் ஓர் எல்லைக்கோட்டை வகுத்து இனி, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும்விதத்தில் இடஒதுக்கீட்டு முறையை மாற்றியமைக்க வேண்டும்’ என்று வைத்யா தெரிவித்துள்ளார். இது, தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments