Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 14, 2016

இன்று இல.கணேசன் மேல்சபை உறுப்பினராக பதவி ஏற்றார்!


மாநிலங்களவை உறுப்பினராக தமிழக பாஜக-வின் மூத்த தலைவர் இல.கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை தலைவர் அறையில் நடைபெற்ற விழாவில் இல.கணேசன் பதவியேற்று கொண்டார். மத்தியப்பிரதேசத்தில் இருந்து பாஜக சார்பில் டெல்லி மேல்சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நஜ்மா அப்துல்லா, மணிப்பூர் மாநில ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இதனையடுத்து, மேல்சபை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். காலியான அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த இடத்துக்கு பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசனை பாஜக மேலிடம் வேட்பாளராக அறிவித்தது. மேல்சபை உறுப்பினர் பதவிக்கு இல.கணேசன், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், காலியாக உள்ள பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இல.கணேசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic