சர்ஜிக்கல் ஆபரேஷன் குறித்த விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினருக்குக்கூட விரிவாக தெரிவிக்காமல் ரகசியம் காக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய இந்த தாக்குதல் குறித்து மத்திய அரசு அடுத்த நாளே அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் தகவல் வழங்கியது. அதேநேரம், தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு இன்று கூடுவதால் சர்ஜிக்கல் ஆபரேஷன் குறித்து கமிட்டி உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதை இந்த விவரங்கள் முடக்கிவிடும் என்ற அச்சமும், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து வெளியே தெரிந்துவிடும் என்ற எச்சரிக்கை உணர்வும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. முன்னதாக 2004ஆம் ஆண்டு முதல் இதுவரை நடந்துள்ள சர்ஜிக்கல் தாக்குதல்கள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க காங்கிரஸ் கோரியிருந்தது. இதற்கு முன்பு அப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்திருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Write comments