சென்னை ஆலந்தூர் அடுத்த ஆதம்பாக்கம் மசூதி காலனியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் என்பவர் ஆட்டோ ஓட்டிவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சிட்டிலிங்க் சாலையில் ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அசாருதீனை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகொலை செய்யப்பட்ட அசாருதீன், கடந்த 2014-ல் வேளச்சேரி பகுதியை சேர்ந்த அருள்நிதி என்பவர் படுகொலை வழக்கில் சிறை சென்று தற்பொழுது ஜாமினில் வெளிவந்தவர் ஆவார்.
எனவே முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments