முன்னதாக இந்த விமானம் கடந்த ஜூன் மாதம் ஏலம் விடப்பட்ட போது, விமானத்தின் மொத்த மதிப்பில் 80 சதவீதம் வரையே ஏலம் கேட்கப்பட்டது. இதனால், விமானத்தை மறு ஏலம் விடுவதற்கான அனுமதியை, சேவை வரித் துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் வழங்கியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி, பி.பி.கொலாபாவாலா ஆகியோர் முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது,விமானத்தை மறு ஏலம் விடும் நடவடிக்கையை துரிதப்படுத்தும்படி, சேவை வரித் துறைக்கு நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டனர்.
"மும்பை விமான நிலையத்தில் இடத்தை அடைத்துக் கொண்டு அந்த விமானம் நீண்ட காலமாக நின்றுகொண்டிருக்கிறது. நீங்களோ (சேவை வரித் துறையினர்) கூடுதல் அவகாசம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். விமானத்தை மறுஏலம் விடுவதற்கான நடைமுறையை துரிதப்படுத்துங்கள்.
வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் விமானத்தை விற்பனை செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் விமானத்தை விற்பனை செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஏர்பஸ் 319 எனும் மல்லையாவின் சொகுசு விமானம், 25 பயணிகளும், 6 ஊழியர்களும் அமரும் வகையிலானது. கருத்தரங்க கூடங்கள், சந்திப்பு அறைகள், குளியலறையுடன் கூடிய படுக்கையறை உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments