‘தீவிரவாதத்தின் தாய்மடியாக இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கோவாவில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆற்றிய தொடக்க உரையில் பேசும்போது, “நமது பொருளாதாரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக தீவிரவாதம் இருந்துவரும் நிலையில், இந்தியாவின் அண்டைநாடு (பாகிஸ்தான்) தீவிரவாதத்தின் தாய்மடியாக விளங்கி வருவது கவலைக்குரியதாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகள் இந்த தாய்மடியுடன் தொடர்புடையவாக உள்ளன. இந்த அச்சுறுத்தலை எதிர்த்து பிரிக்ஸ் நாடுகள் குரல் எழுப்ப வேண்டும். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலமாக இருப்பதுடன் ஆதாயங்களுக்காக தீவிரவாதத்தைப் பயன்படுத்துவது சரிதான் என்றும் நியாயப்படுத்தும் மனப்போக்கை ஆதரித்தும் வருகிறது. இந்த மனப்போக்கை கடுமையாக கண்டித்து பிரிக்ஸ் அமைப்பு வலிமையாக எதிர்த்து போராட வேண்டும்” என்று கூறினார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பகைமை செப்டம்பர் 18ஆம் தேதி உரி தாக்குதலுக்குப் பிறகு மேலும் வலுப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் ராணுவத் தளத்தில் தாக்குதலுக்கு இறங்கியதை பாகிஸ்தான், போதுமான ஆதாரம் இல்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது. அதையடுத்து கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி தீவிரவாத படைகளின் தளங்களில் சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா நடத்தியது.

No comments:
Write comments