பிளாக்பெர்ரி நிறுவனம் DTEK60 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. டூயல் சிம் கொண்ட பிளாக்பெர்ரி DTEK60 ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயக்கப்படுகிறது. பிளாக்பெர்ரி DTEK60 ஸ்மார்ட்போனில் 534ppi பிக்சல் மற்றும் 1440x2560 ரெசல்யூஷன் கொண்ட 5.50 இன்ச் QHD Amoled டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4GB RAM-உடன் 1.6GHz சக்தி கொண்ட Quad-core Qualcom ஸ்னாப்டிராகன் 820 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது.
இதில் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன், மைக்ரோSD கார்டு மூலம் அதிகரித்துக்கொள்ளக்கூடிய வசதியும் இருக்கிறது. பிளாக்பெர்ரி DTEK60 ஸ்மார்ட்போனில் PDAF, டூயல் LED Flash கொண்ட 21 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது, வழக்கமான ஸ்மார்ட்போன்களை விடவும், அதிகரிக்கப்பட்ட பேட்டரி திறனும், அதற்கேற்றதுபோல் குறைந்த அளவில் சக்தியை எடுத்து வேகமாக இயங்கக்கூடிய பிராசஸரும் பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு. Wi-Fi 802.11 a/b/g/n/ac, GPS/A-GPS, GPRS/EDGE, Bluetooth 4.20, NFC, FM ரேடியோ, 3.5 mm ஆடியோ ஜாக், GSM, 3G, 4G LTE மற்றும் மைக்ரோ-USB ஆகியவை இருக்கின்றன.

No comments:
Write comments