உரி தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து இந்திய ராணுவம் கடந்த 28ஆம் தேதி தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதல் குறித்த சந்தேகங்களை எழுப்பிய காங்கிரஸ் கட்சி அதற்கான ஆதாரங்களை வெளியிடும்படி வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியை சாடிய மனோகர் பாரிக்கர் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் சர்ஜிக்கல் தாக்குதல் குறித்து பேசியதன் விவரம்: “சர்ஜிக்கல் தாக்குதலைப் போன்ற ஒரு தாக்குதலை இதற்குமுன்னர் இந்திய ராணுவம் செய்ததில்லை. எல்லை பாதுகாப்புப் படைகளின் சிறு சிறு மோதல்களையே தாக்குதல் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இந்த முறை நடத்தியது துல்லியமான தாக்குதல் நடவடிக்கைதான். ஏனென்றால், முடிவு எடுத்து தெரிவிக்கப்பட்டது. ராணுவம் அதை திறம்பட செய்து முடித்துள்ளது. யாரெல்லாம், சர்ஜிக்கல் தாக்குதல் நடந்ததா என சந்தேகப்பட்டார்களோ அவர்கள் வேண்டுமானாலும் அந்தப் பெருமையை எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், சர்ஜிக்கல் தாக்குதலின் வெற்றி, ஒவ்வொரு இந்தியனுக்கும் உரித்தானது. எந்த ஒரு அரசியல் கட்சிக்குமானது அல்ல. அது, நமது ராணுவத்தால் செய்யப்பட்ட தாக்குதல். எனவே, சந்தேகப்படும் நபர்களும் அதில் உரிமை கோரலாம்” என்றார். பாரிக்கரின் இந்தக் கருத்துக்கு முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “பாரிக்கர் சொன்ன கருத்துக்காக நான் வருத்தப்படுகிறேன். அவர் இந்திய ராணுவத்தையும், நமது நாட்டையும் அவமதித்துவிட்டார். சர்ஜிக்கல் தாக்குதல் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு சுமையாகவும் விரக்தியாகவும் இருந்ததாக அவர் (பாரிக்கர்) கூறினார். அவரை யாராவது கட்டுப்படுத்த வேண்டும்’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Write comments