Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 6, 2016

துர்க்கையம்மன் ஆன மம்தா பானர்ஜி!


இந்தியாவில் சக்தி மிக்க முதல்வர்களுள் ஒருவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அங்கு மார்க்சிஸ்டுகளின் 30 ஆண்டுகால ஆட்சியை அகற்றி விட்டு மாநில முதல்வரானவர். இன்னும் மக்கள் செல்வாக்கோடு திகழ்கிறார். ஆனால், உச்சக்கட்டமாக துர்க்கையம்மனோடு மம்தாவை ஒப்பிட்டு சிலை வைத்துள்ளனர் அவரது தொண்டர்கள். துர்க்கையம்மன் வழிபாடு மேற்கு வங்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேற்கு வங்கத்தில் நடைபெறும் துர்க்கை பூஜையை முன்னிட்டு அம்மாநிலத் தலைவர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு துர்க்கையம்மன் வடிவில் சிலை வைத்துள்ளனர். மேற்கு வங்க மக்கள் துர்க்கையை வணங்கி சிறப்பு பூஜை செய்பவர்கள். அங்கு தற்போது துர்க்கா பூஜை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை 12 கைகள் உடைய துர்க்கையம்மன் போல வடித்து ஃபைபர் க்ளாஸ் (fiber glass) சிலை வைத்துள்ளனர்.
இந்த சிலையின் மொத்த உயரம் 5.5 அடி ஆகும். இதில் 3.5 அடிக்கு துர்க்கை வடிவில் காட்சியளிக்கிறார் மம்தா பானர்ஜி. அவர் வழக்கமாக அணியும் நீல நிற பார்டர் உள்ள வெள்ளை ஆடை மற்றும் ரப்பர் செருப்பு ஆகியவையே இந்த சிலைக்கும் அணிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக களிமண்ணால் செய்யப்படும் துர்க்கை சிலையில் ஆயுதம் ஏந்திய 10 கைகள் இருக்கும். ஆனால், வித்தியாசமாக ஃபைபர் க்ளாஸில் செய்யப்பட்டிருக்கும் இந்த சிலையில் எந்தவித ஆயுதங்களும் இல்லாமல் 12 கைகள் உள்ளன.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic