ஜுன் 8 புர்ஹான் வானி இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் அமைதி குலைந்தது. ராணுவத்துக்கும் மக்களுக்கும் நடந்த மோதலில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடந்த மாதம் உரி முகாம் மீதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் பதிலடியாக இந்தியா சர்ஜிக்கல் ஆபரேஷனை நடத்தியது. இது சர்வதேச அளவில் பிரச்னையாகி இருக்கும் நிலையில், காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறித்து வைத்து தாக்குதல் நடத்துவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடியை காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

No comments:
Write comments