இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை கடந்த எட்டு வருடங்களில் இந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் அதிகபட்சமாக சரிவடைந்துள்ளது என்று ’கோடாக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விடிஸ்’ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வங்கித் துறை, நிதி நிறுவனங்கள் மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் ஏற்பட்ட சரிவுகளும் ஐ.டி. துறையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. மேலும் இத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சுகாதாரக் குறைபாடு மற்றும் திட்டங்களை சரிவர செய்துமுடிக்காத காரணங்களால் ஐ.டி. துறை சரிவடைந்துள்ளது என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஐ.டி. துறையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவால் பல முன்னணி நிறுவனங்கள் அதிகமாக பாதிப்படைந்துள்ளன. இருப்பினும், சில நிறுவனங்கள் லாபம் பெற்றுள்ளன. அதிக லாபம் அடைந்த நிறுவனமாக இன்ஃபோசிஸ் முதல் இடத்தில் உள்ளது. 3 சதவிகித வருவாய் வளர்ச்சியுடன் இன்ஃபோசிஸ் முதலிடத்திலும், 2.6 சதவிகித வளர்ச்சியுடன் ஹெச்.சி.எல். நிறுவனமும் உள்ளன. மேலும் டாடா தொலைதொடர்பு நிறுவனம் 2.4 சதவிகிதமும், விப்ரோ நிறுவனம் 0.5 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Write comments