உலக அளவில் அறிவுசார் திருட்டை மேற்கொள்வதில், அமெரிக்காவுடன் போட்டி போடும் நாடுகள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை என்று தான் கூற வேண்டும். சீனா உலகிலேயே அனைத்து தொழில்நுட்பங்களிலும் முன்னணியில் வர வேண்டும் என்ற உந்துதலில் பலவிதமான குறுக்கு வழிகளில் ஈடுபட்டு வருகிறது. அப்படி, அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை திருட சதியில் ஈடுபட்டதற்காக சீனா நபர் ஒருவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காப்புரிமை பெறப்பட்ட சோள விதைகளை மோ ஹெயிலாங் என்ற அந்த நபர் சீனாவுக்கு எடுத்து செல்ல திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த விதைகள் விவசாய பெரு நிறுவனங்களான டூபன் பயோனீர் மற்றும் மான்சான்டோ ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமானதாகும். அவர் இந்த விதைகளை தன்னை வேலைக்கு அமர்த்திய நிறுவனமான பெய்ஜீங் டபெயிங் டெக்னாலஜி குழுமத்திடம் கொடுக்க திட்டமிட்டிருந்தார் என கூறப்படுகிறது. இறுதியில், டுபோன் பயோனீர் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கொடுத்த ரகசிய தகவலின்படி, அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனமான, எஃப்.பி.ஐ. இந்த சதி செயலை முறியடித்துள்ளது.
அறிவுசார் சொத்து மற்றும் வர்த்தக ரகசியங்களை திருடுவது என்பது ஒரு நாட்டின் தேசிய பொருளாதார பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments