Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 17, 2016

சாக்ஷி மாலிக் நிச்சயதார்த்தம் நடந்தது - சக மல்யுத்த வீரரை மணக்கிறார்


ரியோ ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

24 வயதான சாக்ஷி மாலிக் தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குள் நுழைகிறார். அவரும், சக மல்யுத்த வீரர் சத்யவார்ட் காடியனும் காதலித்து வந்தனர். ஒன்றாக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. சத்யவார்ட், சாக்ஷியை விட 2 வயது இளையவர். இவர் 2010–ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இருக்கிறார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டினர்.

இதையடுத்து சாக்ஷி–சத்யவார்ட் திருமண நிச்சயதார்த்தம் அரியானா மாநிலம் ரோட்டாக்கில் உள்ள சாக்ஷி மாலிக்கின் இல்லத்தில் நேற்று நடந்தது. இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மணமகனின் தந்தை தெரிவித்தார்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic