Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 18, 2016

இந்து முன்னனி சசிகுமார் கொலை குற்றவாளி...

hindu munnani sasikumar murder

கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சி.சசிகுமார் வழக்கில் சந்தேகத்திற்குரிய நபரின் புகைப்படம் ஒன்றை சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

கோவை மாநகர‌ மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சி.சசிக்குமார் என்பவர் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று கொலை செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணையை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட‌ ஒரு சாட்சியின் உதவியுடன் ஒரு நபருடைய படம் வரையப்பட்டுள்ளது. மேற்கண்ட நபரை பற்றிய விபரங்கள் வழக்கின் விசாரணைக்கு உதவியாக் இருக்கும் என சி.பி.சி.ஐ.டி., கருதுகின்றது. மேற்கண்ட நபரின் படம் வெளியிடப்படுகின்றது. படத்திலுள்ள மேற்கண்ட நபர் கோவை DR.பாலசுந்தரம் சாலையில் PRS வளாகத்திலுள்ள சிறப்பு புலனாய்வு பிரிவை அணுகுமாறு கோரப்படுகிறார். பொதுமக்களும் மேற்கண்ட நபரைக் குறித்து தகவல் தெரினந்தால் அதனை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளுக்கு தெரியபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த வழக்கு குறித்த தகவல்களை சென்னை, சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.G.ஸ்டாலின் அவர்களுக்கு 94981-04441 என்ற மொபைல் எண்ணிலும் sidcbcidcbe@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தெரியப்படுத்தலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: விவேகம்

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic