ராம்லீலா கொண்டாட்டத்தில் இராவணின் உருவ பொம்மை எரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் திராவிட கழகத்தினர் இராமர் உருவ பொம்மையை எரித்தனர். இது பெரும் சர்ச்சையையும், பதட்டத்தையும் உருவாக்கியது.
வட மாநிலங்களில் கொண்டாடப்பட்ட ராம்லீலா நிகழ்சியின் போது இராவணனின் உருவ பொம்மையை எரிப்பது என்பது திராவிடர்களை இழிவுபடுத்தும் செயல் என பெரியார் திராவிட கழகத்தினர் தெரிவித்தனர். ராம்லீலாவிற்கு போட்டியாக ராவணலீலா நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டனர். விடுதலையான 7 பேர்களுக்கு சென்னை மீர் சாகிப் பேட்டை பகுதியில் குதிரையில் அமர வைத்து பெரியார் திராவிட கழகத்தினர் அழைத்து வந்தனர்.

No comments:
Write comments