உத்தரபிரதேசம் மாநிலம், தாத்ரி பகுதிக்கு உட்பட்ட பிஸாடா கிராமத்தில் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறப்பட்டு முகமது அக்லாக் என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இந்த கொலை தொடர்பாக 18 பேரை போலீசார் கைது செய்தனர். ராபின் என்ற ரவி என்பவர் முக்கிய குற்றவாளியாக பிடிபட்டார். கடந்த ஓராண்டாக இவர், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கவுதம் புத்நகர் மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை உடல் நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் ரவி மரணமடைந்தார்.
முன்னதாக, சிறுநீரக பாதிப்பால் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெற்றுவந்த ரவியின் உடல்நிலை மோசமானதால் அங்கிருந்து நேற்று பகல் 12 மணியளவில் டெல்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறுநீரக பாதிப்பால் ராபின் உயிரிழக்கவில்லை என்றும் சிறையில் அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.
No comments:
Write comments