Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 5, 2016

பாலிவுட் நடிகர் மீது தேச துரோக வழக்கு!

treason case on bollywood actor

இந்திய இராணுவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகர் ஓம் பூரிக்கு எதிராக தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நடிகர்களை இந்தியா வெளியேற்றியது தொடர்பாக சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று விவாதம் நடத்தியது. அதில் கலந்து கொண்டு பேசிய பிரபல நடிகர் ஓம் பூரி, பாகிஸ்தான் நடிகர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை கடுமையாக விமர்சித்தார்.

அது மட்டுமின்றி, இந்திய இராணுவத்திற்கு எதிராகவும் அவர் கருத்து தெரிவித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் ஒரு இஸ்ரேல் பாலஸ்தீனம் போன்று ஆக வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? எனவும் அந்த விவாதத்தின் போது அவர் கேள்வி எழுப்பினார்.

இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மும்பை அந்தேரி பகுதி காவல் நிலையத்தில் நடிகர் ஓம் பூரி மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic