Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 14, 2016

ரோட்டில் தொழுகை நடத்தியவருக்கு கடும் கண்டனம்..!

condemn against muslim bus driverஇங்கிலாந்து நாட்டில் பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்ற இஸ்லாமிய டிரைவர் ஒருவர் வாகனத்தை பாதி வழியில் நிறுத்தி விட்டு தொழுகையில் ஈடுப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஹேம்ஸ்பியர் நகரில் மியோன் ஜூனியர் என்ற பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இப்பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அண்மையில் லண்டன் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் சென்ற பேருந்தை இஸ்லாமிய டிரைவர் ஒருவர் இயக்கியுள்ளார்.

சுற்றுலா முடிந்த நிலையில் நேற்று அனைவரும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். பள்ளியை அடைய ஒரு மைல் தூரம் உள்ள நிலையில், திடீரென எவ்வித அறிவிப்பும் இன்றி டிரைவர் பேருந்தை நடுவழியில் நிறுத்தியுள்ளார். பின்னர், பேருந்தை விட்டு இறங்கி அவர் தனது கால்களை கழுவிவிட்டு சாலையில் ஒரு சிறிய துணியை விரித்து அதல் முட்டியிட்டு தொழுகை செய்ய தொடங்கியுள்ளார்.

டிரைவரின் இச்செயலால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு தொழுகையை முடித்த ஓட்டுனர் பேருந்தில் ஏறி பள்ளிக்கூடம் திரும்பியுள்ளார். அவரின் இச்செயலுக்கு மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து பெற்றோர் கூறுகையில், ‘டிரைவர் நடுவழியில் பஸ்ஸை நிறுத்தியது தவறு. அதே சமயம், அந்த வழியில் கனரக லாறிகள் அடிக்கடி செல்லும் அப்போது பஸ் மீது மோதி விபத்தும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது’ என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த டிரைவரின் செயல் குறித்து ஆசிரியர் ஒருவர் பேசியபோது, ‘தொழுகையை சிறிது நேரம் அவர் ஒத்தி வைத்திருக்கலாம். பள்ளிக்கு செல்லும் தூரம் மிக அருகிலேயே இருந்தும் அவர் இவ்வாறு நடந்துக்கொண்டது அதிர்ச்சியாக உள்ளது’ என கூறியுள்ளார்.

இஸ்லாமிய மத தலைவரான சுமேல் செளத்ரி என்பவர் கூறியபோது, அவர் செய்த காரியம் தவறு தான். இஸ்லாமியர்கள் ஒரு நாளில் 5 முறை தொழுகையில் ஈடுப‌டுவார்கள். ஆனால், இவற்றை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஒரு வேளை தொழுகை தள்ளிப்போனால், அதனை இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் கூட செய்துக்கொள்ளலாம்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் இது குறித்து பேசியபோது, ‘ஓட்டுனர் செய்த செயல் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல் மீண்டும் நடைபெறாமல் இருக்க அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic