Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 6, 2016

நார்வேயில் முக்காடு அணிய இனி தடை..!

full cover veil will be banned in norway

நார்வே நாட்டில் வகுப்பறை மற்றும் பல்கலைகழகங்களில் பர்தாவிற்கு தடைவிதிக்கும் சட்டம் அமலுக்கு வரவிருக்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நார்வே நாட்டு கல்வித்துறை அமைச்சர் டோர்ஜோர்ன் சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளதாவது, நார்வே அரசு முகங்களை மறைக்கும் பர்தாவிற்கு வகுப்பறைகள் மற்றும் பல்கலைகழக வளாகத்திற்குள் அணிய தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்கட்சி தரப்பிலும் ஆதரவு இருப்பதால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்த தடை அமுல்படுத்தப்படும். ஆனால் இந்த தடை என்பது இஸ்லாமியர்களின் அணியும் முழு ஆடை பர்தாவிற்கு பொறுந்தாது எனவும், முகத்தை முழுவதுமாக மறைக்கும் நிகாப் முறைக்கு மட்டுமே தடைவிதிக்கபப்டுவதாக தெரிவித்தார்.

நார்வே குடிமக்கள் தங்களுடைய மத நம்பிக்கையை பின்பற்ற, அதனை வெளிப்படுத்த அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஒரு கிறிஸ்தவ பெண் தான் அணிந்திருக்கும் சிலுவை மாலை வெளியே தெரியும் படி அணிந்து செல்வதில் எந்த தவறும் இல்லை. அதே போல் ஒரு யூத மாணவன் கிப்பா அணிவது அவனுடைய மதச்சுதந்திரம். அதே போல் ஒரு இஸ்லாமிய பெண் அணிவது அவருடைய முழு சுதந்திரம். அதற்கு நார்வே அரசு தடைவிதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

இருந்த போதிலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் முழு பர்தாவிற்கும் தடையை கொண்டுவந்த நிலையில் நார்வேயும் இதனை அமுல்படுத்தவதாக தெரிகிறது. பல்கேரியா கடந்த வெள்ளிக்கிழமை பொது இடங்களில் முழு பர்தாவை அணிவதற்கு தடை கொண்டுவந்துள்ளது. அதே போல் சுவிட்சர்லாந்திலும் கடந்த வாரம் அந்நாட்டு பாராளுமன்றம் பர்தாவிற்கான தடைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதேபோல் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தமது நாட்டில் பர்தாவிற்கு தடை கொண்டுவர வேண்டுமென்பதற்காக அதற்கு ஆதரவு அளித்தார். பிரான்சு மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் அனைத்துவிதமான பர்தாக்களும் பொது இடங்களில் அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic