இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை மக்கள் சில சமயம் தாங்கள் இரண்டாந்திர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க அமைச்சரே இவ்வாறான கருத்துக்களை கூறியிருப்பது மத்திய அமைச்சரவையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரதீய ஜனதாவின் மத்திய அமைச்ர் முக்தா அப்பாஸ் நக்வி சமீபத்தில் தேசி சிறுபான்மை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
"மத்திய அரசு சிறுபான்மை உரிமைக் விசயத்தில் கருத்து மோதலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை சமூகம் பல்வேறு சமயங்களில் தாங்கள் இரண்டாந்திர குடிமக்களாக நடத்தப்படுவதாக அவர்களின் மனங்களில் எண்ணம் இருக்கின்றது. சிறுபான்மை சமூகத்தின்ற் உரிமைகள் வழங்கப்படுவதில் இந்தியாவின் சட்டதிட்டங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் சிறந்தது என்பதை மறுக்க முடியாது. இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டம் அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்கினாலும் அதனை முறையாக பங்கிடுவதில் குறைபாடு இருப்பதாகவே நான் உணருகிறேன். சிறுபான்மை சமூகத்தின் முக்கிய பல பிரச்சனைகள் கண்டுகொள்ளப்படுவதில்லை. அவைகள் குழி தோண்டி புதைக்கப்படுகிறது" என தெரிவித்தார்.
பா.ஜ.க அமைச்சரின் இந்த பேச்சு கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு வங்கி அரசியலை நடத்துவதற்காகவே நக்வி இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

No comments:
Write comments