இந்திய ராணுவ வீரர்களுக்கு, கிரிக்கெட் வீரர் முகமது கைப் மரியாதை செலுத்திய விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப். இவர் யுவராஜ் சிங்குடன் சேர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் தேடித்தந்த வெற்றியை எந்த கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க முடியாது. சமீபகாலமாக இந்திய அணியில் இவர் இடம் பெறவில்லை என்றாலும், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டுவருகிறார்.
இவர் தற்போது இந்திய எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக சிறிய தகவலை அளித்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில்,’ இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுவதால், எல்லா ராணுவ வீரர்களின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதனால் அவர்கள் ரயில் மற்றும் பஸ்களில் இடம் கிடைக்காமல் படிக்கட்டுகளில் அமர்ந்து செல்கின்றனர். அது போல யாராவது ஜவானை நீங்கள் பார்த்தால், அவர்களுக்கு இடம் கொடுங்கள், ‘ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Write comments