Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 18, 2016

கங்கை நதியில் செருப்புடன் நீராடிய பெண் சாமியார்..!

radhema in ganga riverபிரபல பெண் சாமியார் ராதே மா காலணியுடன் கங்கையில் நீராடியதால் மதபோதகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வடநாட்டில் பிரபலமாக விளங்கும் பெண் சாமியார் ராதே மா. இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். இந்நிலையில் கடந்த ஞாயிறுக்கிழமை அன்று, கங்கையில் நீராடச் சென்றுள்ளார். அப்போது அதிகாலை 3.30 மணியளவில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பி, பிரார்த்தனை செய்துள்ளார். இதையடுத்து காலணியுடன் கங்கையாற்றில் இறங்கி நீராடியுள்ளார்.

ஆனால் கங்கையாற்றில் காலணியுடன் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகம விதிமுறைகளை மீறியதால், பெண் சாமியார் ராதே மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதபோதகர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் தொடர்ந்து தேவையற்ற செயல்களுக்காக ராதே மா அவமதிக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மதத் தலைவர்களும் ராதே மாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic