Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 18, 2016

உங்களையெல்லாம் நம்பி புள்ளைங்கள பள்ளிக்கூடம் அனுப்பவா...?

kohli anushkaமும்பை உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாளில் வீராட் கோலியின் கேர்ள் பிரண்ட் யார்? என்ற கேள்வி இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் ஷாம்பூ விளம்பரத்தில் ஒன்றாக நடித்து வந்தனர். இதன் பிறகே இருவரும் காதலிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பிவாண்டி நகரில் உள்ள சாச்சா நேரு உயர்நிலைப் பள்ளி தேர்வு வினாத்தாளில் வீராட் கோலியின் ‘கேர்ள் பிரண்ட்’ யார்? என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. மேலும், இது ஜோக் அல்ல..! இதற்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு தக்க மதிப்பெண் வழங்கப்படும் என வினாத்தாளில் அச்சிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த கேள்விக்கான விடைகள் கண்டறியும் தேர்வு பட்டியலில், அனுஷ்கா, பிரியங்கா, தீபிகா என மூன்று நடிகைகளின் பெயர்களையும் அளித்துள்ளனர். பள்ளி வினாத்தாளில் இவ்வாறான கேள்வி இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்களுக்கு அறிவை புகட்ட வேண்டிய கல்வி நிறுவனங்கள் எதை புகட்டுகிறது என்பதை பாருங்கள்..! உங்களையெல்லாம் நம்பி பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவைத்தால் எப்படி உருப்படும்..?

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic