Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 18, 2016

பாலியல் புகாரில் சிக்கிய ராஜபக்சேவின் மகன்..!

rajapakshe son
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. அவரது தம்பிகள், மனைவி மற்றும் மகன்கள் மீது அத்தகைய புகார்கள் கூறப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் ராஜபக்சே மூத்த மகன் நாமல் மீது அதிரடியாக ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டுள்ளது. தற்போது நாமல் இலங்கை பாராளுமன்றத்தில் எம்.பி. ஆக உள்ளார்.
வேலை வாங்கி தருவதாக கூறி பல பெண்களை கற்பழித்ததாக அவர் மீது புகார்கள் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மீது 3 பெண்கள் ‘செக்ஸ்’ புகார் கூறியுள்ளனர்.
கண்டியில் உள்ள பிரபல ஓட்டல்களுக்கு இளம் பெண்களை அழைத்து சென்று அவர்களுடன் நாமல் ‘செக்ஸ்’ உல்லாசம் அனுபவித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகிறது.
அதை தொடர்ந்து அந்த ஓட்டல்களுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாதம் ஒன்றுக்கு 4 நாட்கள் ஓட்டல்களுக்கு சென்று பல பெண்களுடன் நாமல் உல்லாசம் அனுபவித்தது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் கண்டி நீலப்படை அணியின் அதிகாரியும் சம்பந்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்சேவுக்கு எதிராக இதுவரை 109 செக்ஸ் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க பிரபலவர்த்தகரும், ராஜபக்சேவில் மைத்துனருமான திருக்குமரன் நடேசன் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்வானை பகுதியில் ஒரு ஆடம்பர பங்களா உள்ளது. அது ராஜபக்சே தம்பி பசிலுக்கு சொந்தமானது என கூறப்பட்டது. ஆனால் அதை பசில் கோர்ட்டில் மறுத்தார்.
அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பங்களா கட்டப்பட்டுள்ள இடம் திருக்குமரன் நடேசனுக்கு சொந்தமானது என்றும், அதை கட்ட நடேசன் பண உதவி செய்திருந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. எனவே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த அவர் கைது செய்யப்பட்டார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic