Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 10, 2016

முதல்வருக்கான மாற்று யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்! - சீமான்

seeman met vignesh family

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் தமிழகத்தை நிர்வகிக்க அவருக்கு மாற்று தற்போது யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி பிரச்சினைக்காக கடந்த மாதம் சென்னையில் நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியின்போது, அதில் பங்கேற்ற திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில், மன்னார்குடியில் உள்ள விக்னேஷின் வீட்டுக்கு நேற்று தனது மனைவி கயல்விழியுடன் வந்த சீமான், விக்னேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, காங்கிரஸும், பாஜகவும் கர்நாடகாவுக்கு சாதமாகவே நடந்துகொள்கின்றன. அதனுடைய வெளிப்பாடுதான், 2007ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டதில் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மாற்றுக் கருத்தை வெளியிடாத மத்திய அரசு, தற்போது இரு மாநிலங்களும் பேசித் தீர்க்கலாம் என்ற கருத்தை வெளியிடுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவாக உள்ள நிலையை காரணமாக முன்வைத்து, காவிரி பிரச்சினையி்ல் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு வேகமாக இறங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று பணிக்கு திரும்பும் வரை, தமிழகத்துக்கு முதல்வர் இடத்தில் இருந்து பணியாற்ற ஒரு பிரதிநிதி அவசியம் தேவைப்படுகிறார். அப்போதுதான், தமிழகத்தின் கோரிக்கையை முன்வைக்க முடியும். எனவே, அந்த பிரதிநிதியை அடையாளம் காட்ட வேண்டும் என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic