அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப், தங்கள் அனுமதி இல்லாமல் கண்ட இடங்களில் கைவைத்ததாக இரண்டு பெண்கள் புகார் தெரிவித்துள்ளதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் டிரம்ப்.
உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ளது. இதற்கான போட்டியில் ஆளும்கட்சி சார்பாக முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார்.
குடியரசுக்கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான சர்ச்சையில் டிரம்ப் சிக்கிவருகிறார்.
சமீபத்தில் வெளியான வீடியோ ஆதாரத்தால் அக்கட்சிக்கு ஏற்கனவே பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டு பெண்கள் இவருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜெசிகா என்பவர், விமானத்தில் பயணம் செய்த போது பணிப்பெண் என்னை டிரம்ப் அருகே அமரவைத்தார். விமானம் கிளம்பி 45 நிமிடத்துக்கு பின் அவர், எனது மார்பில் கைவைத்தார். அத்தோடு நிறுத்தாமல், கண்ட இடங்களில் கைவைத்தார். அதனால் பயத்தில் நான் மீண்டும் என்னுடைய சீட்டுக்கே சென்றுவிட்டேன் என கூறியுள்ளார்.
மற்றொரு பெண்ணான ரக்கீல், நான் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றிய போது, வேலை விஷயமாக வந்த டிரம்ப்பை எல்லாரையும் வரவேற்பது போல வரவேற்றேன். ஆனால் டிரம்ப், திடீரென என்னை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்துவிட்டார். அவர் அப்படி செய்வார் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
ஆனால் டிரம்ப் கட்சியினர், இதை அரசியல் ரீதியான தாக்குதல் என்றும் இதில் கொஞ்சம் கூட உண்மையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
நன்றி: இணைய உலகம்

No comments:
Write comments