Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 15, 2016

உள்ளாட்சி தேர்தல் செலவுகளை எப்படி சமாளிக்கப்போகிறார் தெரியுமா?

தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், 11 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின்போது பல்வேறு அதிரடி உத்தரவுகளை கட்சித் தலைவர் விஜயகாந்த் பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக வட்டாரங்கள் கூறியதாவது, உள்ளாட்சி தேர்தலையொட்டி, கட்சியின் 59 மாவட்டங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை விஜயகாந்த் நியமித்தார். இவர்கள் வழியே விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டம் தோறும் எவ்வளவு விருப்ப மனுக்கள் விற்கப்பட்டன. இதற்காக, வசூலான பணம் எவ்வளவு என்பது குறித்து விஜயகாந்த் கேட்டறிந்தார்.

பின், வசூலிக்கப்பட்ட பணத்தை தலைமையிடம் செலுத்த உத்தரவிட்டார். இந்த பணத்தை வைத்தே, தேர்தலை எதிர் கொள்ள பொறுப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர். விஜயகாந்தின் இந்த திடீர் உத்தரவால் கட்சி நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic