Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 15, 2016

கலைஞர் தன் வாயை மூடிக்கொண்டிருக்க‌ ஒரே வழி...!

panruti ramachandranதிமுக தலைவர் கருணாநிதியை முதலமைச்சராக்கினால் மட்டுமே அவர் அமைதியாக இருப்பார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள நிலையில் அவரது துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனது பொறுப்புகளை மாற்றிக் கொடுக்க முதலமைச்சர் கையெழுத்து போட்டுக் கொடுத்தாரா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார். இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், முதல்வர் குணமடைந்து வருவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், பொறுப்புக்களை மாற்றி கொடுத்ததற்கு முதலமைச்சர் கையெழுத்து போட்டாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி பேசியிருக்கிறார். அவரை முதலமைச்சர் ஆக்கினால் மட்டுமே அவர் சும்மா இருப்பார். கருணாநிதியின் கேள்விகளை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic