பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் மம்தா பானர்ஜி, துணிவிருந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள் என, மத்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
வங்காளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், ‘நீங்கள் யாரையும் தொட வேண்டாம். என்னைக் கைது செய்யுங்கள். உங்களுக்கு சவால் விடுகிறேன். உங்களுக்கு எங்களை கைது செய்யுமளவு துணிவிருந்தால், பண மதிப்பு நீக்கத்துக்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது. பணமதிப்பு நீக்கம், ஒரு மாபெரும் ஊழல். இதன் உண்மையை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் இதை ஆயிரம் முறை சொல்வோம்’ எனத் தெரிவித்தார்.
மாநில அரசுகளை பலவீனப்படுத்த, அதன் அதிகாரிகளை மத்திய அரசு குறி வைக்கிறது எனக் கூறிய மம்தா பானர்ஜி, எங்கள் அதிகாரிகள் யாரையாவது தொட நினைத்தால், நிச்சயம் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. உங்களிடம் மட்டும் சட்டம் இல்லை, மாநில அரசிடமும் சட்டங்கள் இருக்கின்றன. மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். நான் வாழும் வரை, தேவைப்பட்டால் தனித்தே போராடுவேன் என, ஆவேசமாகப் பேசினார்.

No comments:
Write comments