Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Dec 22, 2016

பணம் இல்லை – வங்கியில் பெண் தற்கொலை!


மோடி அரசு கொண்ட வந்த பணமதிப்பிழப்பு பிரச்னையால் இந்தியா முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.பணத்திற்குப் பதில் கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளை பயன்படுத்துங்கள் என்பதுதான் மோடி அரசு மக்களுக்கு தரும் நிர்பந்தத்தால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். வரிசையில் ஏடிஎம்-ல் நின்று பணம் எடுத்தாலும் வெறும் 2000 மட்டுமே எடுக்க முடிகிறது. அப்படி வரும் 2000ஆயிரமும் முழு நோட்டாக வருவதால் சில்லறை மாற்ற பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. சிலரின் செலவுகளுக்கு இந்த 2000 பற்றாக்குறையாக இருப்பதால் இரண்டு, மூன்று ஏடிஎம் நிலையங்களில் நின்று எடுக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், சிகிச்சைக்கு பணம் எடுக்க மறுக்க மறுத்ததல், வங்கி அதிகாரிகள் முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் இதாவாவைச் சேர்ந்த இளம்பெண் கிரிஜா(23). இவர் கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வதுண்டு. இதற்கிடையில் தன்னிடம் பணம் கையிருப்பு இல்லாததால், அருகிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ரூ.2000 பணம் எடுக்கச் சென்றார்.அப்போது KYC ஆவணங்கள் சரியாக இல்லை என்று கூறி திருப்பியனுப்பியுள்ளனர்
இதையடுத்து, தொடர்ந்து 15 நாட்களாக வங்கிக்கு சென்றும், ஆவணங்களை குறை கூறியுள்ளனர். இந்நிலையில், நேற்று மீண்டும் வங்கிக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். மீண்டும் ஆவணங்கள் சரியில்லை என்று அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.இதனால் மனமுடைந்த அவர், தன்னிடம் வைத்திருந்த கத்தியை எடுத்து, அதிகாரிகள் முன்பு குத்திக் கொண்டார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் KYC ஆவணங்கள் வங்கியில் எப்போதும் இருக்கும் என்றும், ஆனால் ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தால் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வங்கி மேலாளர் தெரிவித்தார்.
பணம் எடுக்க வரிசையில் நின்றும், உரிய சிகிச்சை கிடைக்காமலும், விரக்தியிலும் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic