பொருளாதார நிபுணர்கள் மற்றும் வங்கியாளர்கள், கடந்த செவ்வாய்க்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை வருகிற 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை உருவாக்க வற்புறுத்தியுள்ளனர். மேலும் சிறுதொழில் செய்யும் வணிகர்களான காய்கறி வியாபாரிகள், கட்டுமானப் பணியாளர்கள் இந்த பண மதிப்பிழப்பு அறிவிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு உடனடி தீர்வை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நிதியமைச்சகம் சார்ந்த பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறுகையில், ‘கடந்த மாதம் வெளியான பண மதிப்பிழப்பு அறிவிப்பால் கிராமப்புறங்களில் சிரமமான சூழ்நிலை காணப்படுகிறது. காய்கறி வியாபாரிகள், தினசரி தங்களது வியாபாரத்தைக் கையாளுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, பணத் தட்டுப்பாட்டின் காரணமாக விவசாயிகளிடமிருந்து பயிர்கள் விற்பனைக்கு வராததால், பயிர்கள் வீணாகியுள்ளன.
பண மதிப்பிழப்பு குறித்து மத்திய அரசு உடனடித் தீர்வு காணாதவகையில், சாதாரண யூனியன் பட்ஜெட் கூட்டம் போன்று தற்போது வரவிருக்கும் கூட்டம் எளிதாக இருக்காது. மேலும் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கலாம் என்றாலும், மேற்கொண்டு வரவிருக்கும் கருப்புப் பணத்தை அழிக்க முடியாது. எனவே, கருப்புப் பணத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதற்கு டிஜிட்டல் பரிவர்த்தனையே வழிவகுக்கும்.’ என்று தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments