மதுரை(21 ஜன 2017): மதுரை மேலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஜல்லிக்கட்டை நடத்தி முடித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழகம் முழுவது போராட்டம் வெடித்துள்ள நிலையில், எங்கள் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்' என்று மாணவர்கள் அரசியல்வாதிகளுக்கு கறாராக அறிவித்ததால், தமுக்கம் அருகே அவுட் போஸ்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக 17-ம் தேதி தனியாக போராட்டத்தை தொடர்ந்தார்.
அப்போது, போராட்டம் குறித்து பேசிய சீமான், "வருகிற 21-ம் தேதி (இன்று) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவர்களின் கவனத்தை திருப்பிவிட்டு, இன்று காலை மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டை நடத்திவிட்டார் சீமான்.
இதற்கான ஏற்பாடுகளை மிக ரகசியமாக செய்த அவரது கட்சியினர், மாடு வளர்ப்பவர்களிடமும், மாடு பிடி வீரர்களுக்கு மட்டும் தகவல் சொல்லி வரவழைத்து ஜல்லிக்கட்டு நடத்தி, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
No comments:
Write comments